Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய்யை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே?

Pooja Hegde to pair up with Surya following Vijay

தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். முகமூடி படத்திற்கு பின் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த பூஜா ஹெக்டே, தற்போது ‘தளபதி 65’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே, அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார்.

அதன்பின் சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் தான் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் சிவா தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.