youtube வீடியோக்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியவர் பூர்ணிமா ரவி. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏழாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சி மூலம் பூர்ணிமா அதிக அளவில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். youtube ஐ தொடர்ந்து வெள்ளித்திரையில் கவனம் செலுத்த தொடங்கிய இவருக்கு தற்போது நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆமாம் ஆஹா OTT தளத்திற்காக உருவாகும் செவப்பி என்ற படத்தில்தான் இவர் நாயகியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படம் குறித்த போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram