தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது மூத்த மகள் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனுஷை விட்டு பிரிவதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இவர் லால் சலாம் என்ற படத்தை இயக்கப் போவதாகவும் அறிவிப்பு வெளியானது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ரஜினி சிறப்பு வேளத்தில் நடிக்கிறார்.
படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இப்படியான நிலையில் இந்த படத்தில் இருந்து விலகுவதாக ஆடை வடிவம் அமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் அதிர்ச்சடைந்துள்ளனர். இந்த லால் சலாம் திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
