தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. காலையில் 11 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை எக்கச்சக்கமான சீரியல்கள் இந்த சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது.
அந்த வகையில் மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பூவா தலையா. தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வந்த தர்ஷனா இந்த சீரியலுக்காக அதிலிருந்து வெளியேறினார். பிறகு தர்ஷனா பூவா தலையா தொடரில் நடிக்க தொடங்கினார்.
இந்த சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் தற்போது முடிவுக்கு வர இருப்பதாக ஷாக்கிங் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் கிளைமாக்ஸ் எதிர்பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
View this post on Instagram