Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி… பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஒத்திவைப்பு

postponed of ponniyin selvan shooting

‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்குகிறார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 9 மாத இடைவெளிக்கு பின் கடந்த ஜனவரி மாதம் ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி, தொடர்ந்து 50 நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதையடுத்து ஒரு மாதம் இடைவெளி விட்டு அடுத்தக் கட்ட படப்பிடிப்பை இந்த மாதம் ஜெய்ப்பூரில் நடத்த மணிரத்னம் திட்டமிட்டிருந்தார். தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், படப்பிடிப்பை ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு இதுவரை 70 சதவீதம் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.