தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். பாகுபலி படத்திற்குப் பிறகு உலகம் முழுவதும் அறியப் படும் நடிகராக வலம் வரும் இவரது நடிப்பில் இறுதியாக ராதே ஷ்யாம் என்ற திரைப்படம் வெளியானது.
மிக பிரம்மாண்டமாக வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பையும் வசூலையும் பெறவில்லை. பல இடங்களில் படம் நஷ்டத்தை தழுவியதாக சொல்லப்பட்டது. இதனை அறிந்த பிரபாஸ் தான் வாங்கிய 100 கோடி ரூபாய் சம்பளத்தில் இருந்து 50 கோடி ரூபாயை தயாரிப்பாளருக்கு திருப்பித் தந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தமிழ் சினிமாவில் தான் நடிக்கும் படம் சரியாக ஓடவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு அடுத்த படத்தை கொடுத்து கை கொடுப்பதில் முன்னோடியாக இருந்து வருபவர் அஜித். அவரது ஸ்டைலில் பிரபாஸ் படம் நஷ்டம் என்பதால் தன்னுடைய சம்பளத்தில் பாதியை மீண்டும் தயாரிப்பாளருக்கு கொடுத்து இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.