Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகர் பிரபாஸின் காதலி யார் தெரியுமா?வைரலாகும் தகவல்

prabhas-is-in-love-with-a-bollywood-actress

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பாகுபலி படத்தின் மூலம் உலகம் அறிந்த நடிகராக மாறிவிட்டார். இவரும் நடிகை அனுஷ்காவும் காதலித்து வருவதாக பலமுறை வதந்திகள் கிளம்பிய நிலையில் தற்போது பிரபாஸ் பாலிவுட் நடிகை ஒருவரை காதலிப்பதாக வருண் தவான் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

அதாவது இந்தி நடிகை க்ரித்தி சனோன் காதலில் இருப்பதாகவும் அவருடைய மனதில் ஒரு ஆணின் பெயர் பதியப்பட்டு விட்டதாக வருண் தவான் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த நபர் தற்போது தீபிகா படுகோனே உடன் நடித்து வருகிறார் என பேசியுள்ளார். தீபிகா படுகோனே தற்போது பிரபாஸுடன் இணைந்து ப்ராஜெக்ட் கே என்ற படத்தில் நடித்து வருகிறார்.

க்ரித்தி சனோன் காதலிப்பது பிரபாசெய்தான் என உறுதி செய்யப்பட்டு விட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அவரும் பேட்டி ஒன்றின் பிரபாஸை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

prabhas-is-in-love-with-a-bollywood-actress
prabhas-is-in-love-with-a-bollywood-actress