‘வால்டர்’ திரைப்படத்தின், இயக்குனர் அன்பு அடுத்ததாக நடிகர் பிரபு தேவா நடிக்கும் படத்தை இயக்குகிறார். பிரபு தேவாவின் 58-வது திரைப்படமான இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத் குமார் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. நடிகர் ஆர்யா இந்த திரைப்படத்தின் டைட்டிலை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த திரைப்படத்திற்கு ‘ரேக்ளா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
‘ரேக்ளா’ திரைப்படத்திற்கான பிற நடிகர்கள் மற்றும் படக்குழுவிற்கான தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படக்குழு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. நடிகர் பிரபு தேவா தற்போது ‘பஹீரா’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
