Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரபுதேவாவின் பஹீரா படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வைரலாகும் அறிவிப்பு

prabuthevaa-bahira-movie-update

தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராகவும், நடன இயக்குனராகவும், நடிகராகவும் அசத்தி வருபவர் பிரபு தேவா. இவரது நடிப்பில் தற்போது தயாராகி இருக்கும் படம் தான் “பஹீரா”. இப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் அமைரா, காயத்ரி, ஜனனி, சாக்ஷி அகர்வால், ரம்யா நம்பீசன், யாஷிகா, நாசர், சாய்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பரதன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். சைக்கோ திரில்லர் கதை அம்சத்தை கொண்ட இப்படத்தில் பிரபுதேவா பல கெட்டப்பில் நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இப்படம் குறித்து ரிலீஸ் தேதியை படகுழு அறிவித்துள்ளது. அதில் பஹீரா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்ற தகவலை பட குழு வெளியிட்டுள்ளது.

 prabuthevaa-bahira-movie-update

prabuthevaa-bahira-movie-update