தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் பிரதீப் ஆண்டனி. சக போட்டியாளர்கள் இவருக்கு எதிராக கூட்டு சேர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றினார்கள்.
இதையடுத்து பிரதீப்புக்கு ஆதரவாக எக்கச்சக்கமான ரசிகர்கள் குரல் கொடுத்து வந்த நிலையில் அவருக்கு பட வாய்ப்புகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஒரு பள்ளியின் ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட பக்கத்தில் போலீஸ் அதிகாரியோடு அவருக்கு பொன்னாடை போற்றி ராஜமரியாதை வரவேற்று சென்றனர்.
இது குறித்த போட்டோ வீடியோ ஆகியவை இணையத்தில் வெளியாக பலரும் இதனை ஷேர் செய்து விஜய் டிவியை கலாய்த்து வருகின்றனர்.
