தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபலம் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவியின் கோமாளி திரைப்படத்தை இயக்கி அனைவருக்கும் பரிச்சயமான இவர் லவ் டுடே திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார்.
மாபெரும் வெற்றியைப் பெற்ற இப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து பிரதீப் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் விஜய் படத்திற்கு வந்த சூப்பரான சான்சை பிரதீப் மறுத்திருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அதாவது லவ் டுடே திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விஜயின் தளபதி 68 திரைப்படத்திற்கான வாய்ப்பை முதலில் பிரதீப் ரங்கநாதனிடம் தான் கூறியிருக்கிறார். ஆனால் தற்போது பிரதீப் ஹீரோவாக படங்களில் நடித்து வருவதால் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டதாகவும் அதனால் அந்த வாய்ப்பு வெங்கட் பிரபுவிற்கு கிடைத்திருப்பதாகவும் பிரபல சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது.