பிரஜன் ஒரு காலத்தில் தமிழ்நாட்டு பெண்களின் மனதை கவர்ந்தவர். தொகுப்பாளராக இருந்த போது இவருக்கு கிடைத்த வரவேற்பு பெரிய அளவில் இருந்தது.
தொகுப்பாளராக பிரபலமான சாண்ட்ரா என்ற சீரியல் நடிகையை காதல் திருமணம் செய்துகொண்டார். பின் சினிமா பக்கமே இவரை காணவில்லை.
அதன்பிறகு தான் சின்னதம்பி என்ற சீரியல் மூலம் நடிப்பில் களமிறங்கினார், அந்த சீரியல் முடிந்து தற்போது அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த நிலையில் சாண்ட்ரா தனது குழந்தைகளின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்டுள்ளார்.