தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் புதியதாக ஒளிபரப்பாகிவரும் சீரியல் வைதேகி காத்திருந்தாள். இந்த சீரியலில் பிரஜன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சரண்யா நடித்து வருகிறார். இந்த சீரியல் தொடங்கி ஒரு மாதம் மட்டுமே ஆன நிலையில் இதிலிருந்து விலகிக் கொண்டுள்ளார் பிரஜன்.
சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்த முடியாத காரணத்தினால் இந்த சீரியலில் இருந்து அவர் விலகிக் கொண்டுள்ளார். இரண்டு மூன்று படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
இப்படியான நிலையில் வைதேகி காத்திருந்தாள் என்ற சீரியலில் பிரஜன் விலகிக் கொண்டதால் அவருக்கு பதிலாக ராஜபார்வை என்ற சீரியலில் நாயகனாக நடித்து வந்த முன்னா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இவருடைய காட்சிகள் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கலாம்.