தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ்.
தற்போது இவர் கைவசம் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகும் ‘அண்ணாத்த’, பிரஷாந்த் நீலின் ‘கேஜிஎப் 2’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, கார்த்திக் நரேனின் ‘மாறன்’, மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்டப் படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் பிரகாஷ் ராஜ், விரைவில் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். சமீபத்திய பேட்டி மூலம் அவர் இதனை உறுதி செய்துள்ளார். ஏற்கனவே தமிழ் திரையுலகை சேர்ந்த தனுஷ், நெப்போலியன், ஜிவி பிரகாஷ் ஆகியோர் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது பிரகாஷ் ராஜும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.