கடந்த 2004 ஆம் ஆண்டு இயக்குனர் தரணி இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் தான் கில்லி. இப்படத்தில் விஜயுடன் இணைந்து த்ரிஷா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று மாபெரும் வெற்றியை கண்டெடுத்தது.
தற்போது வரை ரசிகர்களின் ஃபேவரைட் திரைப்படமாக இருக்கும் இப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் , திரிஷாவை விரட்டி விரட்டி வெறித்தனமாக காதலித்திருப்பார். இந்நிலையில் இப்படத்தில் ஹைலைட்டாக இருந்த இக்காட்சிகளை நினைவு கூறும் வகையில் ரசிகர்கள் ஒரு சிறிய வீடியோவாக எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.
அதாவது, திருச்சிற்றம்பலம் படத்துடன் கில்லி திரைப்படத்தையும் இணைத்து வைத்து திரிஷாவை நினைத்து பிரகாஷ்ராஜ் உருகுவது போல ஒரு வீடியோவை எடிட் செய்துள்ளனர். அதனை பார்த்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், “இதை யார் செய்திருந்தாலும், இந்த நாளை அழகாக்கிய உங்கள் அன்புக்கு நன்றி. செல்லம்ஸ் ஐ லவ் யூ” என தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் அந்த வீடியோவுடன் இணைத்து பதிவை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Who ever did this .. made my day ❤️❤️ thank you for the love … CHELLAM s I love uuuuu #muthupandi #gilli @trishtrashers pic.twitter.com/K5F74stwfa
— Prakash Raj (@prakashraaj) September 18, 2022