Tamilstar
News Tamil News

அதிக மின்கட்டணம் வசூல் குறித்து பேசிய நடிகர் பிரசன்னாவை பழிவாங்குவது முறையா.. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை

சமிபத்தில் நடிகர் பிரசன்னா தனது வீட்டில் மின்கட்டணம் அதிகமாக வந்துள்ளது என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பிரசன்னாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்காமல், மின்வாரியம் பிரசன்னாவின் விமர்சனத்திற்கு கண்டனமும் தெரிவித்தது. மேலும் பிரசன்னா மார்ச் மாத மின்கட்டணத்தை செலுத்தவில்லை என்றும் தெரிவித்தது.

இதையடுத்து நடிகர் பிரசன்னா வருத்தம் தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

“மின் வாரியத்தையோ அரசையோ குறை சொல்லுவது எனது உள்நோக்கம் இல்லை, உள்நோக்கமில்லாதபோது‌ என்‌ வார்த்தை மின்வாரிய ஊழியர்கள்‌, அதிகாரிகள்‌ மனம்நோகச்‌ செய்திருந்தால் அதற்கு வருந்துகிறேன் என்று நடிகர் பிரசன்னா தனது அறிக்கையில் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து திமுக தலைவர் திரு மு.க. ஸ்டாலின் கூறியதாவது :

“நடிகர் பிரசன்னா மின் கட்டணம் பற்றி கேள்வி எழுப்பியும், அதற்கு முறையாக பதிலளிக்காமல், பழிவாங்கும் வகையில் அவரது மின் கட்டணத்தையே ஆய்வு செய்து, அரசியல் ரீதியான அறிக்கையை” ஒரு விளக்கமாக கொடுத்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது,

மேலும் பொது மக்களிடம் கூடுதல் மின்கட்டணம் வசூலிப்பது கண்டனத்திற்குரியது என்றும், முந்தைய மாத கட்டணங்களை “பேரிடர் நிவாரணமாக” அறிவித்து மேலும் ஆறு மாதங்களுக்காவது மின் கட்டண சலுகைகளை வழங்கிட வேண்டும்” என்றும் திரு மு.க. ஸ்டாலின் மின்வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.