கன்னட திரையுலகில் நடிகர் யாஷ் நடிப்பில் பல்வேறு மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் கே ஜி எஃப். இந்தப் படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் பிரசாந்த் நில் அடுத்ததாக ஜூனியர் என்டிஆர்-ஐ ஹீரோவாக வைத்து படத்தை இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூனியர் என்டிஆர் பிறந்த நாளான இன்று இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜூனியர் என்டிஆர் அடுத்ததாக கொரடலா சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக கேஜிஎஃப் புகழ் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.