Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அடுத்த கட்டத்திற்கு செல்லும் பிரசாந்த்தின் அந்தகன்

Prashanth Andhagan going to the next stage

பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘அந்தாதூன்’. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இவருடன் சிம்ரன், பிரியா ஆனந்த், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அடுத்தகட்டமாக பின்னணி வேலைகளை முழுவீச்சில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.