Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

2026ல் ஜூனியர் என்டிஆர் படம்: பிரசாந்த் நீல் திட்டம்

prashanth neel plan for junior NTR movie

‘கேஜிஎப்’ திரைப்படங்கள் மூலம் இந்திய திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவர் இயக்குநர் பிரசாந்த் நீல். குறிப்பாக ‘கேஜிஎப் 2’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்த நிலையில், ரசிகர்கள் ‘கேஜிஎப் 3’க்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதனிடையே, பிரசாந்த் நீல் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் ஆகியோரை வைத்து ‘சலார்’ படத்தை இயக்கினார். 2023ல் வெளியான இப்படம் ‘கேஜிஎப் 2’ அளவுக்கு வரவேற்பு பெறாவிட்டாலும், கணிசமான வசூலை ஈட்டியது. ‘சலார்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான ‘சலார் 2’ உருவாகும் என அறிவிக்கப்பட்டது. 2024 தொடக்கத்தில் திரைக்கதை தயாராகிவிட்டதாகவும், 2026ல் படம் வெளியாகும் எனவும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு கட்ட படப்பிடிப்பு நடந்த நிலையில், அதன் பிறகு பணிகள் தொடரவில்லை.

தற்போது, பிரசாந்த் நீல் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் ஜூனியர் என்டிஆர் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் நடிகர் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். கர்நாடகாவில் இதன் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை 2026ல் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ‘சலார் 2’ திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஜூனியர் என்டிஆர் படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகே பிரசாந்த் நீல் அடுத்ததாக எந்த படத்தை இயக்குவார் என்பது தெரிய வரும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், பிரபாஸ் மற்றும் ‘கேஜிஎப்’ நாயகன் யாஷ் ஆகியோரின் ரசிகர்கள் அடுத்த அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிரசாந்த் நீலின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


prashanth neel plan for junior NTR movie