நாயகன் நஸ்லென் கல்லூரியில் படிக்கும் போது சக மாணவியை ஒருதலையாக காதலிக்கிறார். அந்த காதல், தோல்வியில் முடிய, அந்த சோகத்தில் இருந்து வெளியேற படிப்பு முடிந்து லண்டன் போக முயற்சிக்கிறார். ஆனால் விசா கிடைக்காததால் அதுவும் முடியாமல் போகிறது.இதனால், தனது நண்பருடன் ஐதராபாத்துக்கு செல்கிறார். அங்கு ஒரு திருமண நிகழ்வில் நாயகி மமிதா பைஜுவை சந்திக்கும் நஸ்லென், அவர் மீது காதல் வயப்படுகிறார். சென்னைக்கு போக நினைத்த நஸ்லென், மமிதாவை காதலிப்பதற்காக ஐதராபாத்திலேயே தங்கி விடுகிறார். மமிதாவிற்கும் அவருடன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஷ்யாம் மோகனும் காதல் இருப்பதாக நண்பர்கள் மூலம் தெரிந்துக் கொள்கிறார். இருப்பினும் தொடர்ந்து மமிதாவை காதலிக்கும் நஸ்லென், ஒரு கட்டத்தில் தன் காதலை வெளிப்படுத்தி விடுகிறார்.இறுதியில் நஸ்லென் காதலை மமிதா ஏற்றுக் கொண்டாரா? மமீதா, ஷ்யாம் மோகன் காதல் உண்மையா? என்பதே படத்தின் மீதிக்கதை.நடிகர்கள்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் நஸ்லென், இளைஞர்களின் பிரதிபலிப்பாக தெரிகிறார்.
யதார்த்த நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். கண்டதும் காதல், காதலுக்காக உருகுவது, காதல் தோல்வியால் வாடுவது என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் மமிதா பைஜு, நடிப்பால் ரசிகர்களை தன் வசப்படுத்தி இருக்கிறார். நட்பு, காதல் என நடிப்பில் வித்தியாசம் காண்பித்து கவனிக்க வைத்து இருக்கிறார். நாயகனின் நண்பனாக நடித்திருக்கும் சங்கீத் பிரதாப், டைமிங் காமெடி மூலம் ரசிக்க வைத்து இருக்கிறார். ஷ்யாம் மோகனின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். இருவரும் பல இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்து இருக்கிறார்கள்.இயக்கம்சாதாரண காதல் கதையை ரசிகர்கள் விரும்பும் வகையில் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கிரிஷ் ஏ.டி.. திருப்பங்கள் இல்லாமல் மிக சாதாரணமாக கதையை நகர்த்தி சென்றாலும், இரண்டு கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு இளைஞர்கள் கொண்டாடும் ஜாலியான காதல் படத்தை கொடுத்திருக்கிறார்.
இசைவிஷ்ணு விஜயின் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பு. பின்னணி இசை ஒரு கதாபாத்திரமாகவே வலம் வந்து ரசிக்க வைத்து இருக்கிறது.ஒளிப்பதிவு கேரளா மற்றும் ஆந்திர கிராமப் பகுதிகளையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் அஜ்மல் சாபு.தயாரிப்புஃபஹத் ஃபாசில் , திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன் ஆகியோர் இணைந்து பிரேமலு படத்தை தயாரித்துள்ளனர்.