Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரின்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான தகவல்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

prince-audio-launch-update-viral

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ள ‘டான்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘பிரின்ஸ்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், வெளிநாட்டு நடிகை மரியா ரியான்ஷாப்கா ஆகியோர் நடித்துள்ளனர். மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை சுரேஷ் மற்றும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக இருக்கும் இப்படத்தின் போஸ்டர்ஸ் மற்றும் இரண்டு சிங்கிள் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்ததை தொடர்ந்து தமன் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 9ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

 prince-audio-launch-update-viral

prince-audio-launch-update-viral