Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் ரன்னிங் டைம் குறைப்பு..! வைரலாகும் லேட்டஸ்ட் அப்டேட்

prince movie running time latest update

கோலிவுட் திரை உலகில் முன்னணி ஹீரோவாக திகழ்பவர் தான் சிவகார்த்திகேயன். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “பிரின்ஸ்” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிகர் சத்யராஜ் மற்றும் வெளிநாட்டு நடிகை மரியா ரியான்ஷாப்கா ஆகியோர் நடித்துள்ளனர்.

வரும் அக்டோபர் 21ஆம் தேதி ஆன நாளை இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. முதல்முறையாக சிவகார்த்திகேயனின் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதால் இப்படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகமாக இருக்கும் நிலையில் இப்படத்தின் ரன்னிங் டைம் குறித்த புது தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, முன்பு பிரின்ஸ் திரைப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 23 நிமிடங்களாக இருந்தது. ஆனால் தற்போது இப்படத்தின் ஒளிபரப்பாகும் நேரத்தில் 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 2 மணி நேரம் 11 நிமிடங்களாக தற்போது மாறியுள்ளது.

prince movie running time latest update
prince movie running time latest update