தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பயணத்தை தொடங்கி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் தயாரிப்பாளராகவும் விளங்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை சுவைத்தது.
இந்த படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தான் பிரின்ஸ். இந்தத் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டார் குழுமம் கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிவகார்த்திகேயனின் திரைப்படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தொகையை கொடுத்து இந்த படத்தை கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.