தமிழ் திரையுலகில் எதிர்நீச்சல் படத்தின் மூலம் கதாநாயகியாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை பிரியா ஆனந்த்.
எதிர்நீச்சல் படத்திற்கு பிறகு வணக்கம் சென்னை, இரும்பு குதிரை, வை ராஜா வை, கூட்டத்தில் ஒருத்தன், எல்.கே.ஜி ஆகிய படங்களில் நடித்து வந்தார்.
மேலும் ஹிந்தியில் ஸ்ரீதேவி நடித்து வெளிவந்த இங்கிலீஷ் விங்லிஷ் மற்றும் Furkey Returns ஆகிய படங்களிலும் கூட நடித்திருந்தார்.
சமீப காலமாக நடிகை பிரியா ஆனந்த் நடிகர் அதர்வாவை காதலித்து வருவதவும், மற்றும் நடிகர் கௌதம் கார்த்திகை திருமணம் செய்யும் வரை சென்று விட்டார் என்று பல விதமான சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் எழுந்தன.
இந்நிலையில் இதன் குறித்து மனம் திறந்து நடிகை பிரியா ஆனந்த் :
“அதர்வா, கவுதம் கார்த்திக் இருவருமே என் நண்பர்கள். அவர்கள் என்னுடைய காதலர்கள் இல்லை. நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நண்பர்கள் என்ற முறையில் இருவருமே விரும்புகிறார்கள்.
அதேபோல் என் நண்பர்கள் இருவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நல்ல சினேகிதியாக நான் விரும்புகிறேன். எந்த விதமான பொய்யான வதந்திகளை மற்றும் சர்சைகளை யாரும் நம்ப வேண்டாம் ” என கூறியுள்ளார்.