Tamilstar
News Tamil News

ஊரடங்கு கொடுத்த மறக்க முடியாத கிப்ட்.. அட்லி வீட்டில் விரைவில் குவா குவா சத்தம்?? குவிந்து வரும் வாழ்த்துக்கள்.!!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் உதவியாளராக பணியாற்றினார்.

ராஜா ராணி திரைப் படத்திற்கு அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கினார்.

இவர் சீரியல் நடிகையான ப்ரியாவை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இது வெறும் தொடர்ந்து நாடு நாடாக சுற்றித்திரிந்து வந்தனர்.

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு இருப்பதால் இருவரும் வீட்டிலேயே இருந்து வருகின்றனர்.

மேலும் பிரியா, அட்லி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தான் கர்ப்பமாக இருப்பது போலவே பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.

இதன் காரணமாக பிரியா கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இது குறித்த சரியான விளக்கத்தை அட்லி தரப்பில் இருந்து தான் அளிக்க வேண்டும்.