சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். இவரது நடிப்பில் தற்போது, குருதி ஆட்டம், ஓ மணப்பெண்ணே, பொம்மை, களத்தில் சந்திப்போம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.
தற்போது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியிட்டு, ‘தகுதியான மணமகன்கள் வரவேற்கப்படுகிறார்கள்’ என்று பதிவிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர். இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.