Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சர்ச்சைக்குரிய கேள்வி கேட்ட ரசிகர்.. பிரியா பவானி ஷங்கர் கொடுத்த தரமான பதிலடி..

Priya Bhavani Shankar Reply to Fan

பல படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியா பவானி சங்கர், நெட்டிசன் ஒருவர் கேட்ட ஆபாச கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். இவர் இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட ஏராளமான கேள்விகளுக்கு பதிலளித்து இருக்கிறார்.

வழக்கமா இதுமாதிரியான சூழல்களில் நடிகைகளை கடுப்பேற்றும் படியான கேள்விகளை சிலர் கேட்பதுண்டு. அந்த வகையில் நெட்டிசன் ஒருவன், உங்களது உள்ளாடை சைஸ் என்ன என்று கேள்வி கேட்டு இருக்கிறார்.

இதற்கு பதிலளித்த பிரியா, “மார்பகங்களை நான் வேற்று கிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை. உங்கள் வாழ்க்கையில் உள்ள பெண்களுக்கு அது உள்ளது” எனக்கூறி தரமான பதிலடி கொடுத்துள்ளார். பிரியா பவானி சங்கரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருது.

Priya Bhavani Shankar Reply to Fan
Priya Bhavani Shankar Reply to Fan