நடிகர் சதீஷ், படங்களில் நடிப்பதைப் போலவே நிஜ வாழ்விலும் கலகலப்பாக இருப்பவர். அவரது சமூகவலைதள கமெண்டுகளை வைத்தே அதைத் தெரிந்து கொள்ளலாம்.
சமீபத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய போட்டோஷூட் படங்களை வெளியிட்டு “இப்போ நான் என்ன நினைக்கிறேன்?” என்று பதிவிட்டிருந்தார். அதற்கு “சதீஷ் கூட ஹீரோயினா நடிக்க முடியாம போச்சே” என்று சதீஷ் கமெண்ட் அடித்தார்.
அதற்கு பதிலளித்த பிரியா, சதீஷ் பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “அப்டி சொல்லாதீங்க கோபால்” என்று நக்கலாக பதிலளித்துள்ளார். பிரியா பவானி ஷங்கரின் இந்த பதில், சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகப் பரவி வருகிறது.