தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, என பல மொழிகளில் திரைப்படங்களுக்கு எழுதியவர், அண்ணாமலை படத்தின் வசனகர்த்தா, எழுத்தாளர், இயக்குநர், திரு.டி.கே. சண்முகசுந்தரம். அவர் எழுதிய, “ப்ரியா + லீலா” கதை,திரைக்கதை,வசன புத்தகத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் வெளியிட மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் சி. ராஜூ அவர்கள் பெற்றுக் கொண்ட மகிழ்ச்சியான தருணம்.
உடன் வேல்ஸ் பல்கலைகழக வேந்தர்- திரு. ஐசரிகணேஷ், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் திரு.முரளி ராமசாமி,இயக்குநர்கள் சங்க செயலாளர்- திரு.R.V.உதயகுமார், எழுத்தாளர்கள் சங்க செயலாளர்- திரு. மனோஜ்குமார், சின்னத்திரை நடிகர் சங்க தலைவர்-
திரு. மனோபாலா, சின்னத்திரை இயக்குநர்கள் சங்க பொதுச்செயலாளர்- திரு.சி.ரங்கநாதன் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர்கள்…