Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆபாசமாக கமெண்ட் செய்த நெட்டிசன்…. நெத்தியடி பதில் கொடுத்த பிரியா வாரியர்

Priya Varrier replied to Netizen

மலையாளத்தில் 2017-ல் வெளியான ஒரு அடார் லவ் படம் மூலம் பிரபலமானவர் பிரியா வாரியர். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியில் அவர் கண்ணடிப்பது சமூக வலைத்தளத்தை அதிர வைத்தது.

இதனால் பிரியா வாரியர் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார். தொடர்ந்து பட வாய்ப்புகளும் குவிந்தன. மலையாளம் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் பிரியா வாரியர், ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் ரசிகர்களின் கமெண்ட்டுகளுக்கும் அவ்வப்போது பதிலளித்து வருகிறார்.

இந்நிலையில், தன்னை பற்றி தொடர்ந்து அவதூறாகவும், ஆபாசமாகவும் கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவரின் ஐடி-யை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பகிர்ந்த பிரியா வாரியர், ஏன் நீ உன்னுடைய உண்மையான ஐடி-யில் இருந்து கமெண்ட் செய்யாமல், போலி ஐடி-யில் இருந்து பேசுகிறாய்? உனக்கு தைரியம் இல்லையா? என பதிலடி கொடுத்துள்ளார்.