Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

டிடி யின் இரண்டாவது திருமணம் குறித்து பரவிய வதந்தி. பிரியதர்ஷினி விளக்கம்

priyadharshini-about-dd-second-marriage update

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பிரபலமான இவர் தன்னுடைய பள்ளி பருவ நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டு திருமணமான சில மாதங்களிலேயே விவாகரத்து செய்து அவரை விட்டு பிரிந்தார்.

இதையடுத்து தற்போது சிங்கிளாக வாழ்ந்து வரும் திவ்யதர்ஷினி தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இப்படியான நிலையில் கடந்த தினங்களுக்கு முன்னர் டி டி திவ்யதர்ஷினி இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் விரைவில் தொழிலதிபர் ஒருவருடன் அவருக்கு திருமணம் நடக்க போகிறது என தகவல் பரவியது.

இந்த நிலையில் பிரியதர்ஷினி அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து கேட்க நாங்களும் டிடியிடம் யார் அந்த தொழில் அதிபர் என கேட்டோம். ஆனால் அவள் எனக்கே தெரியவில்லை என பதிலளித்து விட்டார். அவள் தற்போது வரை அவளுடைய தொழிலில் தான் கவனம் செலுத்தி வருகிறார். இரண்டாவது திருமணம் பற்றி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. நாங்களும் அதைப்பற்றி ஏதாவது கேட்டால் சிரிப்பை மட்டுமே பதிலாக தருகிறாள் என கூறியுள்ளார்.

இதன் மூலம் திவ்யதர்ஷினிக்கு இரண்டாவது திருமணம் என பரவிய தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்பதை உறுதி செய்துள்ளார் பிரியதர்ஷினி.

priyadharshini-about-dd-second-marriage update
priyadharshini-about-dd-second-marriage update