தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும் சீரியல் நடிகையாகவும் வலம் வந்தவர் பிரியதர்ஷினி நீலகண்டன். திருமணத்திற்கு பிறகு சின்னத்திரையில் தலை காட்டாமல் ஓய்வில் இருந்து வந்த இவர் தற்போது மீண்டும் பிஸியான நடிகையாக வலம் வரத் தொடங்கியுள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது 25 வது திருமண நாளை கொண்டாடியுள்ளார்.
கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிரியதர்ஷினியின் தங்கை திவ்யதர்ஷினி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் பிரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கானா என ஆச்சரியத்தோடு கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram