கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இந்தியாவில் கோரதாண்டவம் ஆடி வருகிறது. பாதிப்படைபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. . ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கொரோனாவின் 2வது அலையை எதிர்த்து போராட பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் ஒரு கோடி ரூபாயை கடந்த சில தினங்களுக்கு முன்பு வழங்கினார். இப்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நிதி திரட்டும் பணியில் இறங்கி உள்ளார். கிவ் இந்தியா என்ற அமைப்புடன் இணைந்து இந்த பணியில் இறங்கி உள்ளார்.
கடந்த 24 மணி நேரத்திற்குள் ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் நிதி குவிந்துள்ளது. இந்த பணம் பெங்களூர் மற்றும் மும்பைக்கு ஆக்சிஜன் வாங்க பயன்படுத்தப்படும் என்று பிரியங்கா குறிப்பிட்டிருக்கிறார். தொடர்ந்து நிதி குவிந்து வருகிறது.