Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரியங்கா மோகனை பற்றி பேசிய விஜய்.. வைரலாகும் தகவல்

Priyanka Mohan About Thalapathy Vijay

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில் அடுத்ததாக டான் என்ற திரைப்படம் வரும் மே 13ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் லைக்கா மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்த சிவாங்கி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரியங்கா மோகன் இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தில் நடித்திருந்தார். சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். இந்த நிலையில் பிரியங்கா மோகன் பேட்டி ஒன்றில் விஜய் தனது நடிப்பை பாராட்டி இது குறித்து பேசியுள்ளார்.

டாக்டர் படத்தை பார்த்துவிட்டு விஜய் தன்னை பாராட்டியதாகவும மேலும் ஒரு தெலுங்கு பாடலை பார்த்ததாகவும் தெரிவித்தார். உடனே சார் நீங்க இதையெல்லாம் பார்ப்பீங்களா என கேட்க அவர் எல்லாமே பார்ப்பேன் என தெரிவித்ததாக கூறியுள்ளார்.

Priyanka Mohan About Thalapathy Vijay
Priyanka Mohan About Thalapathy Vijay