‘டாக்டர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ப்ரியா மோகன். இப்படத்தின் மூலம் ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த இவர் இதனை தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. அதன் பின் சமீபத்தில் வெளியான ‘டான்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்த இவர் தற்போது ரசிகர்களின் மத்தியில் கனவு தேவதையாக வலம் வருகிறார்.
இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் வெற்றியின் உச்சத்தை தொட்டுள்ள நிலையில் பிரியா மோகனுக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் இவர் “வெப் சீரிஸ்” ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எட்டு எபிசோடுகளை கொண்டுள்ள இந்த வெப்சீரிஸில் பிரியா மோகன் கவர்ச்சியான நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபகாலமாக ஆன்லைன் மூலமாக ஏமாற்று பேர்வழிகளிடம் ஏமாந்து சீரழியும் இளம் பெண்கள் குறித்த உண்மை கதையை அடிப்படையாகக் கொண்ட இந்த வெப்சீரிஸ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ளது. இந்த வெப் சீரியஸ்க்காண படப்பிடிப்பு அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் இந்த வெப்சீரிஸ் குறித்தும் இதில் பிரியா மோகன் நடிக்க உள்ளார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
