தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர் பிரியங்கா நல்காரி.
இந்த சீரியலுக்குப் பிறகு சீதாராமன் தொடரில் நடித்து வந்த இவர் ராகுல் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். பிறகு திருமணமான ஒரு சில நாட்களிலேயே சீரியலில் இருந்து வெளியேறிய நிலையில் சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நள தமயந்தி சீரியலில் நடிக்க தொடங்கினார்.
இப்படியான நிலையில் இருவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் சேர்ந்து இருக்கும் போட்டோக்களை டெலிட் செய்து விட்ட நிலையில் பிரியங்கா தனது கணவரை தெரிந்து விட்டதாக தகவல் பரவியது. இது சமயத்தில் ரசிகர்களுடன் உரையாடிய பிரியங்காவிடம் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் இப்போது நீங்கள் சிங்கிளாக இருக்கிறீர்களா என்று கேட்க ஆமாம் என பதில் அளித்துள்ளார்.
இதன் மூலம் கணவரை பிரிந்ததை உறுதி செய்துள்ளார் பிரியங்கா. ஆனால் பிரிவுக்கான காரணம் என்ன என்பது குறித்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
