Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விவாகரத்து விவகாரம், பிரியங்கா நல்காரி வெளியிட்ட தகவல்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இந்த சீரியல் முடிவடைந்த பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதாராமன் தொடரில் நடிக்க தொடங்கிய இவர் திருமணம் நடந்ததும் சீரியலில் இருந்து வெளியேறினார்.

கணவருடன் நேரத்தை செலவிட இருப்பதாகவும் அதனால் சீரியலில் இருந்து வெளியேறுவதாகவும் தெரிவித்த நிலையில் சில மாதங்கள் கழித்து நளதமயந்தி சீரியலில் நாயகியாக நடிக்க தொடங்கினார்.

மேலும் இவர் கணவரை பிரிந்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. சோசியல் மீடியாவில் இருந்தும் பிரியங்கா நல்காரி வெளியேறி இருந்த நிலையில் தற்போது மீண்டும் என்ட்ரி கொடுத்ததோடு கணவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Priyanka nalkari Latest post viral
Priyanka nalkari Latest post viral