தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இதனை தொடர்ந்து இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கிய சீதா ராமன் என்ற சீரியலில் நடிக்க தொடங்கினார்.
TRP ரேட்டிங்குடன் நல்ல சீதா ராமன் சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் திடீர் திருமணம் செய்து கொண்ட பிரியங்கா தனது கணவருடன் நேரத்தை செலவிடுவதற்காக இந்த சீரியலில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில் தற்போது ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு பிரியங்கா நல்காரி புதிய சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளார். அதுவும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள சீரியல் தான் என்பது கூடுதல் தகவல்.
ஆமாம், தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களமிறக்கி வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் அடுத்ததாக நளதமயந்தி என்ற பெயரில் புதிய சீரியலை களமிறக்க உள்ளது. ப்ரைம் டைம் நேரத்தில் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் தான் நாயகியாக பிரியங்கா நல்காரி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக பிரியங்கா போட்டோஷூட்டில் பங்கேற்ற நிலையில் அந்த போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. வெகு விரைவில் சீரியல் குறித்த அறிவிப்பு ப்ரோமோ வீடியோவுடன் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இந்த தகவலால் பிரியங்கா நல்காரி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.