திநகரில் ஷாப்பிங் சென்று விட்டு குழம்பித் தவித்து உள்ளார் ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ரோஜா. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் பிரியங்கா. விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நடித்து வரும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்த நிலையில் இவர் சென்னை தி நகர் உஸ்மான் ரோட்டில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்ய சென்றுள்ளார். ஏழடுக்கு தளங்களைக் கொண்ட இந்த கடையில் உள்ள விதவிதமான ஆடைகள் ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் பொம்மைகள் உள்ளிட்டவைகளை பற்றி எதை வாங்குவது என தெரியாமல் குழம்பியுள்ளார்.
புடவைகள் மிக குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் எக்கச்சக்கமான கலெக்ஷன்கள் இருப்பதைப் பார்த்து பெண்களுக்கு இவ்வளவு சாய்ஸ் இருக்கக் கூடாது. எதை எடுக்கிறதுனு தெரியல எல்லாம் அவ்வளவு சூப்பராக இருக்கிறது என கூறியுள்ளார்.
மேலும் இந்த கடையில் இருந்த பெரிய டெடி பியரை பார்த்து உற்சாகமான பிரியங்கா இதுமாதிரி ஒரு டெடியைக் கொண்டு வந்து ப்ரொபோஸ் பண்ணுங்க என தன்னுடைய ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.
ஆனால் காதலை அக்செப்ட் பண்ண மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரியங்காவின் இந்த கலகலப்பான ஷாப்பிங் வீடியோ சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.