அறிவழகன் – நடிகர் அருண் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ’பார்டர்’. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் ‘பார்டர்‘ படத்தை வெளியிட தடை கேட்டு டோனி சினிமாஸ் சார்பில் சார்லஸ் ஆண்டனி சாம், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில் ‘பார்டர்’ என்ற தலைப்பில் தான் படம் ஒன்றை தயாரித்து வருவதாகவும், இந்த படத்தின் தலைப்பை ஏற்கனவே தென்னிந்திய சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அருண் விஜய்யின் நடிப்பில் ’பார்டர்’ என்ற பெயரில் உருவாகியுள்ளதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்த படம் வெளியானால் தனக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும். எனவே படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பார்டர் படத்தின் தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா, தணிக்கை குழு, திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆகியோர் செப்டம்பர் 20ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையைத் தள்ளிவைத்தார்.. இதனால் அருண் விஜய்யின் பார்டர் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.