தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள திரைப்படம் கோட்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் என பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் சக்கரவர்த்தி பேட்டி ஒன்றில் பட்ஜெட் குறித்து பேசி உள்ளார்.
அதாவது கோட் படத்தில் மொத்த பட்ஜெட் 300 கோடி என தெரிவித்துள்ளார். தங்களது தயாரிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் முதல் திரைப்படம் இது தான் எனவும் தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் சம்பளமே கிட்டத்தட்ட 200 கோடி என சொல்லப்படும் நிலையில் அப்போ படத்தின் பட்ஜெட், மற்ற நடிகர் நடிகைகளின் செலவு என எல்லாவற்றும் சேர்த்து வெறும் 100 கோடி தானா என்ற கேள்வியின் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
