Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“தயாரிப்பாளர் சங்கத்தின் உத்தரவுகளை அதர்வா மதிப்பதில்லை”. பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்

ரூ.6.10 கோடி மோசடியில் ஈடுபட்டதாக நடிகர் அதர்வா மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர் மதியழகன் புகார் மனு அளித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் உத்தரவுகளை நடிகர் அதர்வா மதிப்பதில்லை எனவும் மதியழகன் குற்றம்சாட்டியுள்ளார்.

படத்தின் நஷ்டத்தை ஈடுகட்டாமல், பணத்தை திருப்பி தராமல் 4 ஆண்டுகளாக இழுத்தடிப்பதாகவும் தயாரிப்பாளர் மதியழகன் வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், அதர்வா தனது அப்பா முரளியின் பெயரை வைத்து ஏமாற்றி வருவதாகவும், அரசியல்வாதிகளை வைத்து மிரட்டுவதாகவும் தயாரிப்பாளர் மதியழகன் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.

Producer madhiyazhagan complaint atharva
Producer madhiyazhagan complaint atharva