Tamilstar
News Tamil News

சிவகார்த்திகேயன் மேடையில் கதறிக் கதறி அழுத காரணத்தை உடைத்த பிரபல தயாரிப்பாளர்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் சிவகார்த்திகேயன், தனது சினிமா வாழ்க்கையை ஒரு சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் நிலையிலிருந்து தொடங்கினார்.

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 15 கோடி சம்பளம் வாங்கும் அளவிற்கு தன்னைத் தானே உயர்த்திக் கொண்டார்.

இவர் படங்களில் stand-up காமெடிக்கும், சிரிப்பிற்கும் பஞ்சமிருக்காது அதனால் தான் இவருக்கு பெரும்பாலான ரசிகர்கள் குழந்தைகளும் பெண்களுமே!

இவரது சில படங்கள் தோல்வியை கண்டாலும் பல படங்கள் வெற்றி படமாகத்தான் இருக்கும். கடந்த ஆண்டு வெளியான ரெமோ படத்தின் வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் மேடையில் கண்ணீர் விட்ட நிகழ்விற்கு காரணம் என்னவென்று தற்பொழுது இயக்குனர் ரவீந்திரன் கூறியுள்ளார்.

சினிமா துறையில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் இல்லை என்று வெளியில் சொல்லிக் கொண்டாலும் உள்ளுக்குள் தன்னை விட வேறு யாரும் வளர்ந்து விடக்கூடாது என்று நினைப்பவர்களும் அப்படி வளர்ந்தால் அவர்களை பின்னுக்கு தள்ளி விட வேண்டும் என்ற எண்ணமும் அதிகமாக இருக்கிறது.

சிவகார்த்திகேயனின் முன்னேற்றத்தை ஏற்று கொள்ள முடியாதவர்கள் அவரை சினிமாவை விட்டு ஒதுக்க பல வேலைகளை நடத்துகின்றனர். ஆனால் அவர் இப்போது தொடக்கூட முடியாத அளவிற்கு உயர்ந்த நிலையில் உள்ளார் அதற்கு காரணம் அவரது கடின உழைப்பு! என்று இயக்குனர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.