தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவீந்திரன். பட தயாரிப்பு பிரபலமானதை விட பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.
மேலும் இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக மாறியது.
இப்படியான நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன் அவர்கள் திடீரென கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் தொழிலை தொடங்கப் போவதாக போலியான சான்றிதழ்களை காட்டி பாலாஜி என்பவரிடம் 16 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.
இதனால் பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ரவீந்திரனை கைது செய்துள்ளனர்.