Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாடிவாசல் படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் தாணு. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்!!

producer thaanu about vaadivaasal movie

வாடிவாசல் படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் தாணு.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். தற்போது சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க இருந்த நிலையில் இருவரும் அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருப்பதால் படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் வாடிவாசல் படத்தின் தயாரிப்பாளரான தாணு விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவித்துள்ளார். இது மட்டுமில்லாமல் சூரியாவின் அறிமுகக் காட்சி அவ்வளவு அருமையாக இருக்கும் என்றும் அந்த காட்சிக்காகவே ரசிகர்கள் படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பார்கள் கண்டிப்பாக இந்த படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகும் என்று கூறியுள்ளார்.

இவர் கூறிய இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரிக்க செய்துள்ளது.

producer thaanu about vaadivaasal movie

producer thaanu about vaadivaasal movie