திரையுலகில் வெளியாகும் படங்களை விமர்சனம் செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். எந்தப் படமாக இருந்தாலும் அதை எப்படி கலாய்ப்பது என்ற நோக்கத்திலேயே இவர் விமர்சனம் செய்து வருகிறார்.
இறுதியாக அஜித் நடிப்பில் வெளியான வலிமை, சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் உட்பட அனைத்து படங்களை கலாய்த்து விமர்சனம் செய்திருந்தார். குறிப்பாக வலிமை திரைப்படத்தை படுமோசமாக தரக்குறைவாக விமர்சனம் செய்தது ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
இதனால் ரசிகர்கள் பலரும் ப்ளூ சட்டை மாறன் திட்டித் தீர்க்க அவர்கள் அனைவருக்கும் தொடர்ந்து பதில் ட்வீட் போட்டு பதிலடி கொடுத்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன். அந்த வகையில் இவர் வலிமை படுதோல்வி திரைப்படம் என மீம்ஸ் போட்டு கதறு கதறு. இந்த வருசம் முழுக்க கதறு. கமன்ட் போட்டு கதறு. திட்டி திட்டி வாய் வலிக்க கதறு. எனக்கு செம டைம் பாஸ். ஓயாம கதறு. ஓங்கி சத்தமா கதறு என அஜித் ரசிகர்களை சீண்டினார்.
இந்த பதிவுக்கு லென்ஸ், வெள்ளை யானை, திட்டம் இரண்டு, எனிமி உள்ளிட்ட படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் வினோத்குமார் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரது பதிவில் திரையுலகின் அனைத்து சால்வை கூட்டமும் ஒன்றாக திரண்டு பாராட்டியும் ஆன்ட்டி இந்தியன் திரைப்படம் 50 இலட்சம் கூட வசூல் இல்லை. ஆனால் அறுபத்தி ஐந்து கோடிக்கும் அதிகமாக ஷேர் வந்த படத்தை கலாய்ப்பது நீங்களே உங்க மூஞ்சில மல்லாக்க படுத்து துப்பிக்கிற மாதிரி என பதிலடி கொடுத்துள்ளார்.
இவருடைய இந்த பதிலடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.