Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி செயலால் கடுப்பாகி போராட்டம் செய்த ரசிகர்கள்.. வைரலாகும் தகவல்

protest-against-to-thalapathy-vijay latest update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கம் இந்த படத்தின் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

அது மட்டுமல்லாமல் பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் சாம் என பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை ஹைதராபாத் என பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

இறுதி கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் எண்ணூரில் நடந்து வர அங்கு விஜய் பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூட அவர் மீது போலீஸ் தடியடி நடத்தியுள்ளது. தடியடி நடத்த விஜய் தான் காரணம் அவர் கேட்ருகே வந்து கையசைத்தால் போதும் அது கூட செய்யவில்லை என்றால் அப்புறம் என்ன அவர் தளபதி என்ற கோஷங்களோடு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த இடம் பரபரப்பாகி உள்ளது.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடல் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 protest-against-to-thalapathy-vijay latest update

protest-against-to-thalapathy-vijay latest update