Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் படத்தின் கதாபாத்திரங்களின் HD புகைப்படம் வைரல்.

ps-2-movie-characters-hd-stills

கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாக்கி இருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இப்படம்தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்து ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்திருந்தது.

மேலும் முதல் பாகத்தைப்போல் இப்படத்தின் 2 ஆம் பாகத்திற்கும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தீவிரம் காட்டி வரும் படக்குழுவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வரும் நிலையில் இப்படத்தில் நடித்திருக்கும் முக்கிய கதாபாத்திரங்களின் எச்டி புகைப்படங்கள் சிலவற்றை தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.