தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன். சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்திருந்த இந்த படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அதிலும் ரசிகர்களிடம் பொன்னி நதி, தேவராளன் ஆட்டம் ஆகிய பாடல்கள் தற்போது வரை ட்ரெண்டிங்கிலே இருக்கிறது. இதுவரை இப்படத்தில் இருந்த மற்ற பாடல்களின் வீடியோக்களை வெளியிட்ட படக்குழு நீண்ட நாட்கள் ஆகியும் பொன்னி நதி பாடலின் வீடியோவை வெளியிடாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இப்பாடலின் முழு வீடியோவை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. இதனைப் பார்த்து உற்சாகமடைந்த ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.
Here we go!
Presenting the video song of #PonniNadhi from #PS1 ✨🔥
🎶 & 🎤 – @arrahman
✒️ – @ilangokrishnan #PonniyinSelvan1 #ManiRatnam #ARRahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth @Karthi_Offl— Lyca Productions (@LycaProductions) November 14, 2022