தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன். சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்திருந்த இந்தப் படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் மாபெரும் வசூல் சாதனை செய்திருக்கும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முழு வீடியோவை ஒவ்வொன்றாய் படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் நீளம் கருதி இடம்பெறாமல் இருந்த “சொல்” என்னும் பாடலின் முழு வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடல் குந்தவையான த்ரிஷா தனது தோழி வானதி கதாபாத்திரத்தில் நடித்த சோபிதா துலிபாலாவிற்கும் இடையே உள்ள நட்பை பற்றி கூறும் பாடலாகும். இந்த அழகான பாடலை ரசிகர்கள் இணையத்தில் ரசித்து வைரலாக்கி வருகின்றனர்.
A symphony for the ears, a treat for the eyes!
Here is the video song of the beautiful #Sol from #PS1
▶️ https://t.co/Izplm656tk #PonniyinSelvan1 #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth @trishtrashers #SobhitaDhulipala pic.twitter.com/Cz5jftsYcv
— Lyca Productions (@LycaProductions) December 8, 2022